Friday, July 23, 2010

கண் தானம்


கண் தானம் செய்த குடும்பங்களுக்கு நன்றி

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு

கண் தானம் - 1
22.07.2010 வியாழக் கிழமை மதியம்
ஈரோடு, வளையக்காரவீதி, 6, காமாட்சிகாடு
திருமதி சத்தியவதி, திருமதி ராஜலட்சுமி, திருமதி கௌரி மனோகரி
ஆகியோரின் தந்தை
அமரர் வி.லட்சுமணன்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
முன்னாள் தலைவர்
அரிமா.டி.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.




கண் தானம்
- 2
23.07.2010 வெள்ளிக் கிழமை காலை
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுக்கிரமணியக்கவுண்டன் வலசு
திரு. செங்கோட்டையன், திரு. பாலகிருஷ்ணன், திருமதி. புஷ்பா
ஆகியோரின் தாயார்

அமரர். சின்னம்மாள்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.

கண் தானம் பெற உதவிய
அரிமா.ஈ.சத்தியமூர்த்தி அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

துயரம் மிகுந்த நேரத்திலும், நல் மனதுடன் கண்களை தானம் செய்து பார்வையற்ற இரு நபர்களின் வாழ்வில் ஒளியேற்றிய குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

___________________________________________

Thursday, July 15, 2010

இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் - படங்கள்

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் 15.07.2010
வியாழன் இரவு 8 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.



சிறப்பு பேச்சாளர் , பேராசிரியர். சூர்ய நாராயணன் ஆங்கில இலக்கியத்தையும், கண்ணதாசனின் பாடல்களையும் ஒருங்கே குறிப்பிட்டு மிகச் சுவாரஸ்யமாக உரை நிகழ்த்தினார்.





மகிழ்ச்சி வழிந்தோடிய கூட்டம் என்றே கூறலாம்

Tuesday, July 13, 2010

இலவச கண்சிகிச்சை முகாம் - 1








ஈரோடு அருகில் இருக்கும்
கணபதிபாளையம் மற்றும் அறச்சலூர்
அரசு பள்ளிகளில் 18.07.2010 ஞாயிறு
9.00 மணிமுதல்
மதியம் 1 மணி வரை
கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

கண் பார்வை குறை உள்ளவர்களுக்கு
கோவை அரவிந்த் மருத்துவமனைக்கு இலவசமாக
அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்து
IOL லென்ஸ் பொருத்தப்படும்.

அனைவரும் பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.


விபரங்களுக்கு.
_________________

அரிமா.சுகுமார் 94427-89599
அரிமா. தனவேல்முருகன் 98659-74659



******************

Monday, July 12, 2010

நிகழ்முறைக்கூட்டம் - 2

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம்
________________________________



சிறப்பு பேச்சாளர் :
பேராசிரியர். சூர்ய நாராயணன்,
கோவை

தலைப்பு :
பூத்துக் குலுங்கும் சிந்தனை மலர்கள்

நாள்: 15.07.2010 வியாழன் நேரம்: இரவு 8.00 மணி
இடம் : ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், ஈரோடு



00000000

Sunday, July 11, 2010

பதவியேற்பு விழா, விருதுகள் வழங்கும் விழா

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா 07.07.2010 புதன்கிழமை இரவு மிகச் சரியாக 8.00 மணிக்கு ஈரோடு ஈஸ்வர மூர்த்தி அரங்கில் துவங்கியது.



வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட மேடை, பொறுப்பாளர்களுக்கு மேடைக்கு கீழே இருக்கைகள், மிகப் பிரமாண்டமான விருதுகள் வழங்கும் விழா, முதன் முறையாக சிறப்பு பேச்சாளர் இல்லாத விழா என இதுவரை சுப்ரீம் சங்கத்தில் நடந்த பதவியேற்பு விழாக்களிலிருந்து தனித்தன்மையோடு இந்த ஆண்டு விழா துவங்கியது.




2009-2010ம் ஆண்டின் தலைவர் அரிமா. கலையரசன் அவர்களின் வரவேற்புரைக்குப் பின், அரங்க விளக்குகள் அணைய வித்தியாசமான முறையில் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் துவங்கியது. எங்கிருந்து குரல்கள் வருகின்றன, அது நிஜமான குரல், எது பதிவுசெய்யப்பட்டு ஒலிபரப்பாகும் குரல் என்ற ஆச்சரிய சந்தேகங்கள் அரங்கு முழுதும் அலையலையாய் எழும்பிக்கொண்டேயிருந்தன.




அரிமா. தனபாலன் அவர்களின் வழிகாட்டுதலில், அரிமாக்கள் கதிர்வேலு, மகேஸ்வரன், சசிகலா தனபாலன், சுந்தரபாண்டியன் கீதாரவிச்சந்திரன் ஆகியோரின் உழைப்பு சிறிதும் வீண்போகவில்லை. விழா நிறைந்தும் கைகளை இறுகப் பற்றி பாராட்டுவோர் விழிகளில் ஆச்சர்யம் சிந்துவதை கவனிக்கத் தவறவில்லை.




விருதுகள் வழங்கும் விழாவின் தொடக்கமாக....

12 இயக்குனர் குழு கூட்டம் மற்றும் 24 நிகழ்முறைக் கூட்டங்களில் கலந்து கொண்ட அரிமாக்களுக்கான விருது 30 அரிமாக்களுக்கு வழங்கப்பட்டது.

தலைசிறந்த திட்டத் தலைவர் விருது அரிமா. ரங்கசாமி அவர்களுக்கும்

தலை சிறந்த மூத்த அரிமா விருது அரிமா. குமாரசாமி அவர்களுக்கும்

தலை சிறந்த இயக்குனர் விருது அரிமா. தியாகராஜன் அவர்களுக்கும்

தலைசிறந்த அரிமா விருது அரிமா. மகேஸ்வரன் அவர்களுக்கும்

தலைசிறந்த புதிய அரிமா. ராமசாமி அவர்களுக்கும்

தலைசிறந்த கண் தான விருது அரிமா. சசிகலா அவர்களுக்கும்

தலைச்சிறந்த பங்களிப்பு விருது அரிமா. சுகுமார் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.




விருதுகளை முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அரிமா. பிரணவமர்மன், அரிமா. பழனிவேலு, மாவட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் அரிமா.எல்.எம். ராமகிருஷ்ணன், இரண்டாவது துணை மாவட்ட ஆளுநர் அரிமா. சந்திரசேகரன் ஆகியோர் வழங்கி வாழ்த்துரை அளித்தனர்.



முன்னாள் கூட்டுமாவட்டத் தலைவர் அரிமா. என்.முத்துசாமி புதிய தலைவர் அரிமா.குருசாமி தலைமையிலான புதிய இயக்குனர் குழுவை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.




புதிய தலைவர் அரிமா.குருசாமி ஏற்புரை வழங்கினார்.



உடனடி முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா. அர்விந்த்ராஜ், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து உரை நிகழ்த்தினார்.


உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா.கல்யாணசுந்த்ரம் சங்கத்தின் சட்டவிதிமுறைகள் கையேட்டை வெளியிட்டு, கடந்த ஆண்டில் சங்கத்திலிருந்து மாவட்ட அமைச்சரவையில் அமைச்சரவைச் செயலராக பணிபுரிந்த அரிமா.ரவிச்சந்திரன் மற்றும் இதழாசிரியர் அரிமா. குருசாமி ஆகியோரைக் குறிப்பிட்டு அனைத்து அரிமாக்களையும் வாழ்த்தினார்.



முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா. ரமேஷ் ஆர்.லுல்லா அவர்கள் விருதுகள் கையேட்டை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

______________________________________________________

அரிமா மாற்றுத்திறனாளி பள்ளி மதிய உணவு

ஈரோடு அரிமா சொசைட்டி நடத்தும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில், 07.07.2010 புதன் கிழமை மதியம் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவர் அரிமா. குமாரசாமி அவர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.














பட்டயத்தலைவர் அரிமா. குமாரசாமி, சங்கத்தலைவர் அரிமா.குருசாமி, முன்னாள் தலைவர். மாரிமுத்து, அரிமா.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Saturday, July 10, 2010

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் - அறிமுகம்

ஈரோடு நகரில் 1992ம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்று 205 உறுப்பினர்களோடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம். ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வருவாய் மாவட்டங்களைக் கொண்ட 324B2 அரிமா மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் சங்கம் என்பதை பெருமையாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டம் நடந்து வருகின்றது.

சுப்ரீம் அரிசா சங்க அறக்கட்டளை மூலம் அரிமா இரத்த வங்கி நடத்தப்படுகிறது. ஈரோடு நகரில் சேவை மனப்பான்மையோடு மிகக் குறைந்த கட்டணத்தில் இரத்தம் அளிக்கப்படுகிறது.

சுப்ரீம் அரிமா சங்கத்தின் மைல் கற்கள்.....

  • உறுப்பினர்கள்
  • இரு மாத இடைவெளியில் வரும் சங்க இதழ்
  • ஒரே ஆண்டில் 11,000த்திற்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சை செய்து IOL பொருத்தியதில் உலக சாதனை
  • 200 உறுப்பினர்களுக்கு மேல வைத்திருக்கும் சங்கம்
  • கடந்த இரண்டு வருடங்களில் 92 ஜோடி கண்களை தானமாக எடுத்து, 184 பேருக்கு பார்வை வழங்கியது
  • அறக்கட்டளை மூலம் அரிமா இரத்த வங்கி
  • அரசுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் காசிபாளையம், கணபதிபாளையத்தில் பள்ளிக்கூட கட்டிடங்கள்