துணைமாவட்ட ஆளுநர்கள், அரிமா. P.சந்திரசேகரன், அரிமா.A.P.சுப்பிரமணியம், அமைச்சரவை ஆலோசனைக்குழுத் தலைவர் அரிமா Dr.L.M.ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா K.தனபாலன், சிறப்புவிருந்தினர் திரு.பவா. செல்லத்துரை உட்பட மாவட்ட அமைச்சரவை முக்கியப் பொறுப்பாளர்கள், மேடையை அலங்கரித்தனர்.

வரவேற்பு பாடல், உலக அமைதிக்கு ஒரு நிமிட மௌனம் , வரவேற்புரை என விழாவின் நிகழ்வுகள் தொடர்ந்தன.
சிறப்பாக செயல்பட்ட அரிமாக்களுக்கான விருதுகளுக்கு தகுதியான நபர்கள் பட்டியலை அரிமா. கீதாரவிச்சந்திரன் வாசிக்க அரிமா. Dr.L.M.ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.
2011-2012ம் ஆண்டிற்கான புதிய இயக்குனர் குழுவை பதவியில் அமர்த்தி வாழ்த்தினார் அரிமா. K.தனபாலன்.

புதிய தலைவர் அரிமா.S.மகேஸ்வரனின் ஏற்புரைக்குப் பின், சங்கத்தில் இணைய வந்த புதிய உறுப்பினர்களுக்கு அரிமா. P.சந்திரசேகரன் உறுப்பினர் பிரமாணம் செய்து வைத்தார்.
சிறப்புவிருந்தினர் திரு. பவா.செல்லத்துரை அவர்கள் சிந்தனையைத் தூண்டும் மிகச்சிறப்பானதொரு உரையை வழங்கி அரங்கு நிரம்பியிருந்த அரிமாக்களை மகிழ்வித்தார்.

ஈரோடு சுப்ரீம் இரத்தவங்கி அறக்கட்டளையின் புதிய இரத்த வங்கிக்கான கட்டிட நிதியை மாவட்டம் முழுவதிலும் இருந்து வழங்கிய நிதியினை அறக்கட்டளைப் பொருளரிடம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் அரிமா. A.P.சுப்பிரமணியம் அவர்கள்.
மண்டலத்தலைவர் அரிமா S.ராஜாசேதுபதி அவர்களின் வாழ்த்துரைக்குப் பின் விழா முறைப்படி ஒத்தி வைக்கப்பட்டது.
