Tuesday, July 26, 2011

பதவியேற்பு விழா

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் பதவியேற்பு விழா, ஈரோடு பெருந்துறை ரோடு, ஈஸ்வரமூர்த்தி மஹாலில் மிகச் சரியான நேரத்தில் துவங்கப்பட்டது.

துணைமாவட்ட ஆளுநர்கள், அரிமா. P.சந்திரசேகரன், அரிமா.A.P.சுப்பிரமணியம், அமைச்சரவை ஆலோசனைக்குழுத் தலைவர் அரிமா Dr.L.M.ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா K.தனபாலன், சிறப்புவிருந்தினர் திரு.பவா. செல்லத்துரை உட்பட மாவட்ட அமைச்சரவை முக்கியப் பொறுப்பாளர்கள், மேடையை அலங்கரித்தனர்.




வரவேற்பு பாடல், உலக அமைதிக்கு ஒரு நிமிட மௌனம் , வரவேற்புரை என விழாவின் நிகழ்வுகள் தொடர்ந்தன.

சிறப்பாக செயல்பட்ட அரிமாக்களுக்கான விருதுகளுக்கு தகுதியான நபர்கள் பட்டியலை அரிமா. கீதாரவிச்சந்திரன் வாசிக்க அரிமா. Dr.L.M.ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.

2011-2012ம் ஆண்டிற்கான புதிய இயக்குனர் குழுவை பதவியில் அமர்த்தி வாழ்த்தினார் அரிமா. K.தனபாலன்.



புதிய தலைவர் அரிமா.S.மகேஸ்வரனின் ஏற்புரைக்குப் பின், சங்கத்தில் இணைய வந்த புதிய உறுப்பினர்களுக்கு அரிமா. P.சந்திரசேகரன் உறுப்பினர் பிரமாணம் செய்து வைத்தார்.



சிறப்புவிருந்தினர் திரு. பவா.செல்லத்துரை அவர்கள் சிந்தனையைத் தூண்டும் மிகச்சிறப்பானதொரு உரையை வழங்கி அரங்கு நிரம்பியிருந்த அரிமாக்களை மகிழ்வித்தார்.



ஈரோடு சுப்ரீம் இரத்தவங்கி அறக்கட்டளையின் புதிய இரத்த வங்கிக்கான கட்டிட நிதியை மாவட்டம் முழுவதிலும் இருந்து வழங்கிய நிதியினை அறக்கட்டளைப் பொருளரிடம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் அரிமா. A.P.சுப்பிரமணியம் அவர்கள்.



மண்டலத்தலைவர் அரிமா S.ராஜாசேதுபதி அவர்களின் வாழ்த்துரைக்குப் பின் விழா முறைப்படி ஒத்தி வைக்கப்பட்டது.

Sunday, July 10, 2011

கண் சிகிச்சை முகாம் - 1

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கமும், கோவை அரவிந்த கண் மருத்துவமனையும் இணைந்து 03.07.2011 ஞாயிறு அன்று ஈரோடு கணபதிபாளையம் மற்றும் அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது.






கணபதிபாளையத்தில் நடைபெற்ற முகாமில் 283 நபர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 130 நபர்கள் கண் அறுவைசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அரச்சலூரில் நடைபெற்ற முகாமில் 145 நபர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில்58 நபர்கள் கண் அறுவைசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அறுவை சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் கோவை அரவிந்த கண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.




இலவச கண்சிகிச்சை முகாம்களுக்கான ஏற்பாடுகளை திட்டத் தலைவர் அரிமா. தனவேல்முருகன், திட்ட இயக்குனர்கள் அரிமா. விஜயராகவன், லட்சுமி நாராயணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் முகாமில் மாவட்ட கண்ணொளித்திட்டத் தலைவர் அரிமா. D.ரவிச்சந்திரன், சங்கப் பொறுப்பாளர்கள் அரிமாக்கள் மகேஸ்வரன், குருசாமி, செந்தில்குமார், பாலகிருஷ்ணன், தமிழ்செல்வன், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முகாம் சிறக்க பொருளாதார உதவி செய்த அரிமாக்கள் ஸ்பிக்.ராஜேந்திரன், சீனிவாசன், குணசேகரன், தியாகராஜன் ஆகியோர் பாராட்டுகளுக்கும் நன்றிகளுக்கும் உரியவர்கள்.

--------------------------------