ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா 07.07.2010 புதன்கிழமை இரவு மிகச் சரியாக 8.00 மணிக்கு ஈரோடு ஈஸ்வர மூர்த்தி அரங்கில் துவங்கியது.



வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட மேடை, பொறுப்பாளர்களுக்கு மேடைக்கு கீழே இருக்கைகள், மிகப் பிரமாண்டமான விருதுகள் வழங்கும் விழா, முதன் முறையாக சிறப்பு பேச்சாளர் இல்லாத விழா என இதுவரை சுப்ரீம் சங்கத்தில் நடந்த பதவியேற்பு விழாக்களிலிருந்து தனித்தன்மையோடு இந்த ஆண்டு விழா துவங்கியது.



2009-2010ம் ஆண்டின் தலைவர் அரிமா. கலையரசன் அவர்களின் வரவேற்புரைக்குப் பின், அரங்க விளக்குகள் அணைய வித்தியாசமான முறையில் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் துவங்கியது. எங்கிருந்து குரல்கள் வருகின்றன, அது நிஜமான குரல், எது பதிவுசெய்யப்பட்டு ஒலிபரப்பாகும் குரல் என்ற ஆச்சரிய சந்தேகங்கள் அரங்கு முழுதும் அலையலையாய் எழும்பிக்கொண்டேயிருந்தன.



அரிமா. தனபாலன் அவர்களின் வழிகாட்டுதலில், அரிமாக்கள் கதிர்வேலு, மகேஸ்வரன், சசிகலா தனபாலன், சுந்தரபாண்டியன் கீதாரவிச்சந்திரன் ஆகியோரின் உழைப்பு சிறிதும் வீண்போகவில்லை. விழா நிறைந்தும் கைகளை இறுகப் பற்றி பாராட்டுவோர் விழிகளில் ஆச்சர்யம் சிந்துவதை கவனிக்கத் தவறவில்லை.



விருதுகள் வழங்கும் விழாவின் தொடக்கமாக....
12 இயக்குனர் குழு கூட்டம் மற்றும் 24 நிகழ்முறைக் கூட்டங்களில் கலந்து கொண்ட அரிமாக்களுக்கான விருது 30 அரிமாக்களுக்கு வழங்கப்பட்டது.
தலைசிறந்த திட்டத் தலைவர் விருது அரிமா. ரங்கசாமி அவர்களுக்கும்
தலை சிறந்த மூத்த அரிமா விருது அரிமா. குமாரசாமி அவர்களுக்கும்
தலை சிறந்த இயக்குனர் விருது அரிமா. தியாகராஜன் அவர்களுக்கும்
தலைசிறந்த அரிமா விருது அரிமா. மகேஸ்வரன் அவர்களுக்கும்
தலைசிறந்த புதிய அரிமா. ராமசாமி அவர்களுக்கும்
தலைசிறந்த கண் தான விருது அரிமா. சசிகலா அவர்களுக்கும்
தலைச்சிறந்த பங்களிப்பு விருது அரிமா. சுகுமார் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.



விருதுகளை முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அரிமா. பிரணவமர்மன், அரிமா. பழனிவேலு, மாவட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் அரிமா.எல்.எம். ராமகிருஷ்ணன், இரண்டாவது துணை மாவட்ட ஆளுநர் அரிமா. சந்திரசேகரன் ஆகியோர் வழங்கி வாழ்த்துரை அளித்தனர்.



முன்னாள் கூட்டுமாவட்டத் தலைவர் அரிமா. என்.முத்துசாமி புதிய தலைவர் அரிமா.குருசாமி தலைமையிலான புதிய இயக்குனர் குழுவை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.



புதிய தலைவர் அரிமா.குருசாமி ஏற்புரை வழங்கினார்.



உடனடி முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா. அர்விந்த்ராஜ், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து உரை நிகழ்த்தினார்.



உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா.கல்யாணசுந்த்ரம் சங்கத்தின் சட்டவிதிமுறைகள் கையேட்டை வெளியிட்டு, கடந்த ஆண்டில் சங்கத்திலிருந்து மாவட்ட அமைச்சரவையில் அமைச்சரவைச் செயலராக பணிபுரிந்த அரிமா.ரவிச்சந்திரன் மற்றும் இதழாசிரியர் அரிமா. குருசாமி ஆகியோரைக் குறிப்பிட்டு அனைத்து அரிமாக்களையும் வாழ்த்தினார்.


முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா. ரமேஷ் ஆர்.லுல்லா அவர்கள் விருதுகள் கையேட்டை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
______________________________________________________