Saturday, July 10, 2010

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் - அறிமுகம்

ஈரோடு நகரில் 1992ம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்று 205 உறுப்பினர்களோடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம். ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வருவாய் மாவட்டங்களைக் கொண்ட 324B2 அரிமா மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் சங்கம் என்பதை பெருமையாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டம் நடந்து வருகின்றது.

சுப்ரீம் அரிசா சங்க அறக்கட்டளை மூலம் அரிமா இரத்த வங்கி நடத்தப்படுகிறது. ஈரோடு நகரில் சேவை மனப்பான்மையோடு மிகக் குறைந்த கட்டணத்தில் இரத்தம் அளிக்கப்படுகிறது.

சுப்ரீம் அரிமா சங்கத்தின் மைல் கற்கள்.....

  • உறுப்பினர்கள்
  • இரு மாத இடைவெளியில் வரும் சங்க இதழ்
  • ஒரே ஆண்டில் 11,000த்திற்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சை செய்து IOL பொருத்தியதில் உலக சாதனை
  • 200 உறுப்பினர்களுக்கு மேல வைத்திருக்கும் சங்கம்
  • கடந்த இரண்டு வருடங்களில் 92 ஜோடி கண்களை தானமாக எடுத்து, 184 பேருக்கு பார்வை வழங்கியது
  • அறக்கட்டளை மூலம் அரிமா இரத்த வங்கி
  • அரசுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் காசிபாளையம், கணபதிபாளையத்தில் பள்ளிக்கூட கட்டிடங்கள்

No comments:

Post a Comment