வியாழன் இரவு 8 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு பேச்சாளர் , பேராசிரியர். சூர்ய நாராயணன் ஆங்கில இலக்கியத்தையும், கண்ணதாசனின் பாடல்களையும் ஒருங்கே குறிப்பிட்டு மிகச் சுவாரஸ்யமாக உரை நிகழ்த்தினார்.
மகிழ்ச்சி வழிந்தோடிய கூட்டம் என்றே கூறலாம்
12 இயக்குனர் குழு கூட்டம் மற்றும் 24 நிகழ்முறைக் கூட்டங்களில் கலந்து கொண்ட அரிமாக்களுக்கான விருது 30 அரிமாக்களுக்கு வழங்கப்பட்டது.
தலைசிறந்த திட்டத் தலைவர் விருது அரிமா. ரங்கசாமி அவர்களுக்கும்
தலை சிறந்த மூத்த அரிமா விருது அரிமா. குமாரசாமி அவர்களுக்கும்
தலை சிறந்த இயக்குனர் விருது அரிமா. தியாகராஜன் அவர்களுக்கும்
தலைசிறந்த அரிமா விருது அரிமா. மகேஸ்வரன் அவர்களுக்கும்
தலைசிறந்த புதிய அரிமா. ராமசாமி அவர்களுக்கும்
தலைசிறந்த கண் தான விருது அரிமா. சசிகலா அவர்களுக்கும்
தலைச்சிறந்த பங்களிப்பு விருது அரிமா. சுகுமார் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
விருதுகளை முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அரிமா. பிரணவமர்மன், அரிமா. பழனிவேலு, மாவட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் அரிமா.எல்.எம். ராமகிருஷ்ணன், இரண்டாவது துணை மாவட்ட ஆளுநர் அரிமா. சந்திரசேகரன் ஆகியோர் வழங்கி வாழ்த்துரை அளித்தனர்.
முன்னாள் கூட்டுமாவட்டத் தலைவர் அரிமா. என்.முத்துசாமி புதிய தலைவர் அரிமா.குருசாமி தலைமையிலான புதிய இயக்குனர் குழுவை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.
புதிய தலைவர் அரிமா.குருசாமி ஏற்புரை வழங்கினார்.
உடனடி முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா. அர்விந்த்ராஜ், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து உரை நிகழ்த்தினார்.
உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா.கல்யாணசுந்த்ரம் சங்கத்தின் சட்டவிதிமுறைகள் கையேட்டை வெளியிட்டு, கடந்த ஆண்டில் சங்கத்திலிருந்து மாவட்ட அமைச்சரவையில் அமைச்சரவைச் செயலராக பணிபுரிந்த அரிமா.ரவிச்சந்திரன் மற்றும் இதழாசிரியர் அரிமா. குருசாமி ஆகியோரைக் குறிப்பிட்டு அனைத்து அரிமாக்களையும் வாழ்த்தினார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா. ரமேஷ் ஆர்.லுல்லா அவர்கள் விருதுகள் கையேட்டை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
______________________________________________________
ஈரோடு நகரில் 1992ம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்று 205 உறுப்பினர்களோடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம். ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வருவாய் மாவட்டங்களைக் கொண்ட 324B2 அரிமா மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் சங்கம் என்பதை பெருமையாக தெரிவித்துக்கொள்கிறோம்.
மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டம் நடந்து வருகின்றது.
சுப்ரீம் அரிசா சங்க அறக்கட்டளை மூலம் அரிமா இரத்த வங்கி நடத்தப்படுகிறது. ஈரோடு நகரில் சேவை மனப்பான்மையோடு மிகக் குறைந்த கட்டணத்தில் இரத்தம் அளிக்கப்படுகிறது.
சுப்ரீம் அரிமா சங்கத்தின் மைல் கற்கள்.....